இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அன்புமணி கலந்து கொண்டு, கொடியேற்றினார்.

Loading

இன்னும் ஒரு மாதத்தில் இட ஒதுக்கீடு அறிவிப்பு வரவில்லை என்றால், என் தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது என சேலம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் பேரூந்து நிறுத்தம் பகுதியில், மாலை 4 மணியளவில், பா.ம.க., கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அன்புமணி கலந்து கொண்டு, கொடியேற்றினார். இதன் பின்னர் நிகழ்ச்சி மேடைக்கு சென்றவுடன், மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி,
பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா,ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன்,முன்னாள் எம்.பி.தேவதாஸ்.நகர செயலாளர் பொன்னுதுரை நகர தலைவர் வெங்கடேஷ் பேரூர் பொருளாளர் லட்சுமி நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மாவட்ட அமைப்பு தலைவர் ராஜமூர்த்தி,மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம் மாநில செயற்குழு உறுப்பினர் இராமச்சந்திரன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாண்டியன்,முன்னாள் சேர்மேன் நாராயணன்,
மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் முருகன்,மாவட்டதுணை தலைவர் முருகேசன்,மாவட்ட தேர்தல் பணிக்குழு பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பச்சமுத்து,செந்தில்,ஆனந்தபாபு மற்றும் இளைஞர் சங்கம் இராஜகணபதி,பாலாஜி, கௌளதமன் மகளிர் சங்கம் கோகிலா,மணிமேகலை, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேசுகையில் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் கொண்டு வர செய்தது பா.ம.க., தான். வித்தியாசமான கட்சியாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு மறுபெயர் பா.ம.க., தான். இந்தியா,தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் 6 இட ஒதுக்கீட்டிற்கு காரணம் மருத்துவர் அய்யா தான்.2015ல் முதன் முதலில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி, முதன் முதலில் பா.ம.க., கட்சியின் அன்புமணி ராமதாஸ் நான் தான் தெரிவித்தேன். எல்லா மக்களும் ஜாதி, மத, இனத்தை பார்க்காதீர்கள். திட்டத்தை, வளர்ச்சியை, தேவையை பாருங்கள். கடலூரில் நிலக்கரி சுரங்கம் வந்தபோது யாரும் கேட்கவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவதாக தெரிவித்ததும் திடீரென கோபம் வந்துவிட்டது. ஏனென்றால் தஞ்சாவூரில் உள்ளது வேறு சமுதாயம், கடலூரில் உள்ளது வேறு சமுதாயம் இந்த ஒரே காரணம்தான். டெல்டா பகுதியில் எடுத்தால் கோபம் வருகிறது, கடலூரில் எடுத்தால் கோபம் வராதா. அங்கு மக்கள் வாழ வில்லையா அல்லது உங்களுக்கு ஓட்டு போடவில்லையா. இதை விடப்போவதில்லை. தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் தேவையில்லை. தமிழ்நாடு மின்மிகை மாநிலம். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் தேவை 18 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. இரு மடங்கு அதிக உற்பத்தி நடைபெறுகிறது. வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சம்பந்தமாக முதல்வர் ஒரு மாதத்தில் அறிவிக்க வேண்டும். அன்பா,பாசமா, மரியாதையாய் கேட்கின்றோம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றம்,தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் புள்ளி விவரங்களை வைத்து அதை சரி படுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளி விவரம் உள்ளது. அதை எடுக்க ஒரு வருடம் ஆகியும் தி.மு.க., அரசுக்கு மனம் வரவில்லை. நான் ஆட்சியில் இருந்தால் இந்த புள்ளி விவரத்தை எடுக்க 6 மணி நேரம் போதும். முதல்வர் இன்னும் ஒரு மாதத்தில் இட ஒதுக்கீட்டை அறிவியுங்கள். இல்லையென்றால் என் தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. இது ஜாதி பிரச்சனை அல்ல, சமூக நீதிப் பிரச்சனை. சமூகநீதி பேசும் தி.மு.க., அரசால் சமூக நீதிப் பிரச்சினையை ஒரு வருடமாக தீர்க்க முடியவில்லை. போராட்டத்திற்கு தயாராகி விட்டோம். முன்பு நடந்த போராட்டம் வேறு, ஆனால் இனிமேல் நடக்கப் போற போராட்டம் வேற மாதிரி, இந்தியாவே பார்க்காத போராட்டம் தமிழகத்தில் நடைபெறும். என அவர் தெரிவித்தார்.மேற்கண்ட நிகழ்ச்சியில்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *