குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதி மாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகிறது. வருகின்ற 08.04.2023 தேதி  திருவள்ளூர் வட்டம், ஸ்ரீ தேவிகுப்பம் நியாய விலைக் கடை அருகில்,ஊத்துக்கோட்டை வட்டம், வடதில்லை நியாய விலைக் கடை அருகில்,பூந்தமல்லி வட்டம், சமத்துவபுரம் நியாய விலைக் கடை அருகில், திருத்தணி வட்டம், கார்த்திகேயாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பள்ளிப்பட்டு வட்டம், கொத்தூர் நியாய விலைக் கடை அருகில்,பொன்னேரி திருப்பாலைவனம்-1 வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,கும்மிடிப்பூண்டி வட்டம், அப்பாவரம் நியாய விலைக் கடை அருகில்,ஆவடி வட்டம், நெமிலிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆர்.கே.பேட்டை பத்மாபுரம் நியாய விலைக் கடை அருகில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும்; புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறும், மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *