சித்த மருத்துவ நலவாழ்வு மையம்

Loading

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ நலவாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, அமையத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு, இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டத்தை மாநில அளவில் துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை இங்கே தொடங்கி வைக்கப்படுகிற எந்த திட்டமாவது உடனடியாக இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மிக எளிதாக கொண்டு போய் சேர்க்கின்ற வகையில் திட்டத்தின் தொடக்கம் என்பது நம் திருவள்ளுர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
இந்த இளஞ்சி மன்றம் என்பது தமிழ்நாட்டில் 385 ஒன்றியங்கள் இருக்கிறது என்றால் ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளிகளில் தேசிய மருத்துவ பயிர்கள் வாரிய நிதியுதவியுடன் மூலிகை தோட்டம் ஒன்று அந்த பளளியில் அமைப்பது. அந்த வகையில், அந்த கொள்ளுமேடு பகுதியில் ஒரு மூலிகை தோட்டம் அமைக்கப்படும்.இந்த மருந்து மாத்திரைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று சித்த மருத்துவர்கள் சொன்னப்படி இந்த மருந்து மாத்திரைகளை கொண்டுபோய் உட்கொள்ள தொடங்கினால் நோய் எதிர்ப்பு சக்தியும், ஞாபக சக்தியும் வளரிளம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலும் இந்த மருந்து மாத்திரைகளால் உண்டாகும்.அதில் சித்த மருத்துவத்திற்கு தேவையான சித்தம், சித்த மருத்துவம், யுனானி, ஓமியோபதி பல்வேறு மருத்துவத்திற்கு தேவையான சிறப்புக்குரிய திட்டங்கள் அறிவிக்கப்படவிருக்கிறது.என அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இப்பள்ளியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பாக அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் பருவ மாணவ மாணவியர் நலன் காக்கும் பொருட்டு இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டத்தை மாநில அளவில் துவக்கி வைக்கும் விதமாக வல்லாரை மாத்திரை, நெல்லிக்காய் இலேகியம், இரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உள்ளிட்ட சித்த மருத்துவம் மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகங்களை மாணவ மாணவியர்களுக்கு அமைச்சர் இலவசமாக வழங்கி அத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும் பள்ளி வளாகத்திலேயே மூலிகை தோட்டம் பராமரிக்கப்பட்டு மூலிகை இனங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அமைக்கப்பட்ட இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டத்தை மாநில அளவில் துவக்கி வைக்கும் விதமாக அவ்விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ்.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், இணை இயக்குநர்கள் மரு.பார்த்திபன் (இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி), பி.சேகர் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.அய்யா சாமி, இணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால், முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், சித்த மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள்,  மாணவ, மாணவியர்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *