பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள் விற்பனை செய்யும் கடை தடை
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்களின் உத்தரவின் பேரில்,
நீலகிரி மாவட்டத்தில்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள் விற்பனை செய்யும் கடைகளில்
குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களின் தலைமையில்,
வருவாய்த் துறையினர் தணிக்கை மேற்கொண்டு
ரூ. 27,000/-
அபராதம் விதித்தனர். மேலும், தடை செய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த குன்னூர் ஊரகம் கிராமம் வெல்லிங்டன் பேரக்ஸ் என்ற இடத்தில் குவாலிட்டி மார்ட் என்ற கடையும்,
லூர்துபுரம் என்ற இடத்தில் நிஜாமுதின் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையையும் சீல் வைத்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்பவர்கள், கடைகளில் விற்பவர்கள்
மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பொது மக்கள் மற்றும் கடை விற்பனையாளர்
களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள்,
விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு மேற்கொண்டு கடைகளுக்கு அபராதம் விதித்தும் ,பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொது மக்களிடமும்,கடை விற்பனையாளர்
களிடம், தொடர்ந்து
விழிப்புணர்வினை ஏற்படுத்தியும், பொது மக்களின் மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு,
பொது மக்களுக்கு உதவி செய்தும், “கடமையை செய் பலனை எதிர்பாராதே” ஏன்ற வாசகதிற்கு ஏற்ப,
பொது மக்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே தன் முதல் பணி, என்று மிக சிறப்பாக பணியாற்றி அயராது உழைத்தும் தொடர்ந்து பொது மக்களின் பாராட்டுக்களை பெற்று வரும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களுக்கும், வருவாய் துறையினர் அனைவருக்கும், செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும் ,
பொது மக்கள் சார்பாகவும், சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்கள் சமூக பணி…