விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை

Loading

திருவள்ளூர் மார்ச் 31 : விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி  www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க சர்வதேச,தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்,சர்வதேச,தேசிய போட்டிகளில் முதலிடம்,இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும்.

ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்,அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள்,இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச,தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்,ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சம்,இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச,தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தெரிந்திருக்க வேண்டும்.

2023-ம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.15,000 க்குள் இருத்தல் வேண்டும்.ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம்,மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் 19.04.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *