அங்கன்வாடி ஊழியர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இணைச் செயலாளர் ரம்பா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெயசக்தி அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில இணை செயலாளர் அமிர்த வள்ளி கலந்து கொண்டு பத்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினிமையமாக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை பிரதான மையத்தோடு இணைப்பதை கைவிடக் கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், பத்து ஆண்டுகள் பணி செய்த உதவியாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க கோரியும், தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ளபடி முழு தொகையும் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் சிஐடியு ரவிச்சந்திரன், தவராஜ், செல்வம் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.