டாஸ்மாக் பாரில் விடியவிடிய மது விற்பனை!
டாஸ்மாக் பாரில் விடியவிடிய மது விற்பனை!
-தூங்கும் மதுவிலக்கு துறை! பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் அபிராமி தியேட்டர் எதிரில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 5950 க்கான பாரில் விடிய விடிய மதுபான விற்பனை நடந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் வேலூர் சுற்றுவட்டாரத்தில் பழைய தேசிய நெடுஞ்சாலையிலேயே 4 ஒயின் ஷாப்புகள் உள்ளது. இவற்றில் அபிராமி தியேட்டர் எதிரில் உள்ள கடைஎண் 5950க்கான பாரில் தொடர்ந்து 24 மணி நேரமும் மது விற்பனை சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. கரூர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலையில் இந்த பார் அமைந்துள்ளதால் கொடிக்கால் வேலை மற்றும் கரூர் டெக்ஸ் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் காலை முதல் மதியம் வரை இங்கு மது குடித்துவிட்டு போதையில் திளைக்கின்றனர். அவ்வப்போது இந்த பாரின் முன்னதாக நிற்கும் வாகனங்களால் விபத்துக்களும் அவ்வப்போது தகராறும் ஏற்படுவது வழக்கம்.
வேலூரில் 3 பார்கள் இருப்பினும் இங்கு மினி ரெஸ்டாரன்ட் அமைக்கப்பட்டுள்ளதாலும், பாரில் கிடைக்கும் இலவச உணவு வகைகளுக்காகவே கூட்டம் அலைமோதுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்க அரசு சியூஜி எண்ணான 9498166367 க்கு போன் செய்தால் எடுப்பதே இல்லை எனவும், ஆனால் மாதாமாதம் வந்து விட்டு போவதாகவும் அதனால் தான் மதுவிலக்கு காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். பாரில் விற்கும் உணவுகள் இறைச்சி வகைகள் பிரிட்ஜில் வைத்த முதல் நாள் பொருட்களையே சில நேரங்களில் தருவதாகவும் உணவு பாதுகாப்பு துறை அலுவலரின் ஆதரவாலும் இங்கு ரெய்டு வந்தாலும் முன்கூட்டியே தகவல் தந்துவிட்டு தான் வருவதாகவும் அதனால் தப்பித்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர். முன்பு வேலூர் தாபாக்கள் பற்றி புகார் சென்றபோது கூட ஒத்திகை பார்த்துவிட்டே சேம்பிள்ஸ் எடுத்ததாகவும் கூறுகின்றனர்.
இப்படி இருக்க, பரமத்திவேலூர் கடைஎண் 5950ல் விடியவிடிய விற்கப்படும் மது எங்கிருந்து வாங்கப்படுகிறது என்று மட்டும் யாரும் கூற தயாராக இல்லைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.