கார்டைட் பேக்டரி லேபர் யூனியன் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.
குன்னூர் அருவங்காடு கார்டைட் பேக்டரி லேபர் யூனியன் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.
குன்னூர் அருவங்காட்டில் உள்ள கார்டைட் வெடி மருந்து தொழிற்சாலை,
இந்த தொழிற்சாலை 119 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் அப்போது வெள்ளைய ஏகாத்திபத்தியம் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டத்தில் கார்டைட் தொழிற்சாலையின் அதிகாரிகளும் வெள்ளையர்களாகவே இருந்தனர். அவர்கள் உள்ளூர் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெடி மருந்து உற்பத்தி செய்ய கட்டாயப்படுத்தப் பட்டார்கள் . இயந்திரங்கள் பெரிய அளவில் இல்லாமல் வெடி மருந்து தொடர்பான அனைத்து பணிகளையும் கைகளாலயே செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனை எதிர்த்து கேட்டால் பல்வேறு தாக்குதலுக்கு தொழிலாளர்கள் உட்படுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில் 1924 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தொழிற்சங்கம் தான் கார் டைட் பேக்டரி லேபர் யூனியன். எந்தவிதமான தொழிலாளர் நல சட்டங்களும் இல்லாத காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்களையும் நடத்தி தியாகங்கள் பல செய்து தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய பல உரிமைகளை வென்றெடுத்தது இந்த சங்கம் தற்போது இந்த சங்கம் நூற்றாண்டை கடந்து தனது வீரநடையை போட்டு வருகிறது.
தொழிற்சங்க அலுவலகத்தில் AIDEF. சம்மேளனத்தின் தலைவர் S.N.பாதக் அவர்கள் சங்கத்தின் கொடியை எற்றி வைத்தார்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.