புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பெற்று வரும் 4,783 மாணவிகள்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தொடங்கப்பட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பள்ளிக்கல்வி பயின்றுள்ள அரசுப்பள்ளி மாணவிகள், கல்லூரி போவதற்கும், இடைநிற்றலை தவிர்ப்பதற்கும் தான் இந்தத் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக 6-ஆம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள், அவர்கள் தொடர்ந்து 12-ஆம் வகுப்பு வரை படித்து, முடித்து, மேற்படிப்பிற்கு, கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுக்கு வசதி இல்லாத காரணத்தினால், கல்லூரிக்கு செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகதான் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகிற இந்தத் திட்டம்.ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகைகளை பெற்று வந்தாலும் இந்தத் திட்டத்தில் கூடுதலாக இந்த உதவியை பெற முடியும்.

இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் இந்து கல்லூரிக்கு கடந்த 08.02.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக வருகை தந்து துவக்கி வைத்தார். அதனடிப்படையில்  திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் முதற் கட்டமாக 3,310 மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 31 இலட்சத்து 70 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருவள்ளுர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் இரண்டாம்; கட்டமாக 1,473 மாணவியர்களுக்கு ரூ.14 இலட்சத்து 73 ஆயிரம் நிதி என மாவட்டம் முழுவதும் உயர்கல்வி பயின்று  வரும் மாணவியர்களில் இத்திட்டத்தின் மூலம் 4,783 மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 46 இலட்சத்து 43 ஆயிரம் நிதி தமிழக அரசால் சமுக நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி லோகநாதன் நாராயணசாமி அரசு கல்லூரி மாணவி பவித்ரா தெரிவித்ததாவது :நான் பொன்னேரி ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். தற்பொழுது பொன்னேரி லோகநாதன் நாராயணசாமி அரசு கல்லூரியில் BSc மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது தந்தை விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் பயின்று வந்தேன். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் எனக்கு மாத மாதம் ரூபாய் ஆயிரம் நேரடியாக எனது வங்கி கணக்கிற்கே வந்து விடுகிறது. இதனால் எனது படிப்பு செலவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த சிறப்புமிகு திட்டத்தை என்னை போன்ற ஏழை பெண்களுக்கு வழங்கி, படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிய, முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசு கலைக்கல்லூரி மாணவி வீ.மகாலட்சுமி கூறுகையில்,நான் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை ஒரு சிறு விவசாயி. சிறிய அளவில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் என்னை படிக்க வைக்கின்றனர். மிகவும் சிரமத்திற்கு நடுவே தான் நான் கல்லூரிக்கு செல்ல முடிந்தது. தொடர்ந்து மேன்மேலும் படிப்பதற்கே மிகவும் சிரமமாக இருந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த புதுமைப்பெண் என்ற திட்டம் மூலமாக என்னைப் போன்ற ஏழை பெண்களின் உண்மையான நிலை அறிந்து மாத மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கி எங்கள் கல்விக்கு உயர் கல்விக்கு பெரும் உதவி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்நிலையில், பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு, மாதந்தோறும் ரூ.1000-ம் கிடைப்பதினால் அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன் மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவருடைய எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறனும் கூடும். பாலின சமத்துவம் ஏற்படும். மேலும், குழந்தைத் திருமணங்களும்; குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். சொந்தக் காலில் பெண்கள் நிற்பார்கள் என பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் பெண் சமுதாயத்திற்கு ஏற்பட வித்திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் நெஞ்சாhந்த நன்றியை தெரிவிக்கின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *