46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

Loading

ஈரோடு தாளவாடி அருகே தொட்டபுரம் மலை கிராமத்தில் 46 அடி உயர விஸ்வரூப ருத்ர ஜெய வீர  ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சிலை, கிருஷ்ணன் ராதா சிலை, மனித உருவில் ஆஞ்சநேயர் சிலை மற்றும் 50 கைகள் கொண்ட காத்த வீரிய அர்ஜுனர் சிலை அமைக்கப்பட்டது.
இந்த 46 அடி உயர ஆஞ்சநேயர் சிலையானது ராமர் பாதுகை கையில் ஏந்திய படியும், சனி பகவானின் மாந்தன், மாந்தி ஆகிய சிலைகள் ஆஞ்சநேயர் பாதத்தில் தஞ்சம் அடைந்துள்ளவாறும் அமைக்கப்பட்டு உள்ளது. உலகில் எங்கும் இல்லாத வடிவில் இந்த ஆஞ்சநேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50 கைகள் கொண்டு 50 வகை ஆயுதங்களுடன் சுதர்சன ஆழ்வார் காத்த வீரிய அர்ஜுனர் சிலைக்கு கண் திறக்கப்பட்டது.
இந்த கோவிலில் 24-ந் தேதி  விநாயகர் பூஜை, பஞ்சகாவிய பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. 25-ந் தேதி 3, 4-ம் கால யாக பூஜை நடந்தது.26-ம் தேதி காலை கோ பூஜை, பரிபூஜை, யாக பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தீர்த்த குடங்கள் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் மனித ரூபத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, 46அடி உயர விஸ்வரூப ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் சிலைக்கு பால், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். இதில் தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு ஆகிய பகுதிகள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *