என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான் – நடிகை சமந்தா

Loading

என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான் – நடிகை சமந்தா
சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது என நடிகை சமந்தா கூறினார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைக்கு பின் தேறி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே சமந்தா நடித்து முடித்த சாகுந்தலம் படம் திரைக்கு வர உள்ளது. துஷ்யந்தன், சகுந்தலை பற்றிய புராணபடமாக இது தயாராகி உள்ளது. இதில் சகுந்தலை வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், “டைரக்டர் சாகுந்தலம் படத்தின் கதையை சொன்னபோது என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். காரணம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் சகுந்தலை போல இருக்க மாட்டேன். எனக்குள் அந்த தேஜஸ், கம்பீரம் இருக்காது என தோன்றியது. அதன் பிறகு வற்புறுத்தி நடிக்க வைத்தனர். கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது.
அதன்பிறகு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என எனக்குள் பயம் ஏற்பட்டால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துகொள்வேன். பயத்தை தாண்டி செல்ல முயற்சி செய்கிறேன். என் எண்ணங்கள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் இதைத்தான் அனுசரிக்கிறேன். ஒரு மனுசியாக, நடிகையாக மூன்று ஆண்டுகளாக எனது முன்னேற்றத்திற்கு காரணம் இந்த பயம்தான்” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *