மாணவ,மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

Loading

 திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெரும்புதூர் டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியின் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழாவில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தேசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற சட்டக்கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூ.7 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக அறிவித்தார். பார் கவுன்சிலுக்கு மூலதனம் வைப்பு தொகையை ரூ.20 கோடியை ஒதுக்கி தந்த பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். சென்னை புறநகர் பகுதியி;ல் 7 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய பெருமையும், கல்விக்கண்ணை திறக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.28 ஆயிரம் கோடியை இந்தியாவிலேயே எந்த மாநிலமும் ஒதுக்காத அளவில்  நிதி ஒதுக்கியுள்ளார். இந்த முறை நிதிநிலை அறிக்கையில் ரூ.40 ஆயிரம் கோடி மாணவச் செல்வங்களின் கல்விக்கண்ணை திறக்க வேண்டும் என்ற உணர்வுடனும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உணர்வுடனும் நிதி ஒக்கிய பெருமை தமிழ்நாடு முதலமைச்சரையே சாரும்.
தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தால் மாணவச் செல்வங்களின் பள்ளி வருகை தமிழ்நாட்டில் உள்ள 1,885 பள்ளிகளில் 40 சதவிகிதம் மாணவர்களின் வருகை உயர்ந்துள்ளது.இந்த நலத்திட்டங்கள் மூலம் மாணவச் செல்வங்கள் தங்களின் கல்வியையும், தகுதியையும, தரத்தையும் வளர்த்துக்கொண்டு பல வல்லுநர்களாக சிறந்து விளங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாதிரி நீதிமன்ற போட்டியின் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்ற சென்னை புதுப்பாக்கம் டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்ளுக்கும், இரண்டாம் பரிசு பெற்ற வேலூர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழஙகி பாராட்டினார்.இதில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிரிராஜன்,திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, டாக்டர்.அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *