விவசாயிகள் முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Loading

வேளாண் பொறியியல் துறையின் சார்பில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகளை மானிய விலையில் பெற்று பயனடைந்த விவசாயிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை
தெரிவித்துக் கொண்டனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தினையும்,வருமானத்தினையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வேளாண் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், சூரிய மின்சக்தி பம்ப் செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு பயிர் பாதுகாப்பு அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் மதிப்புக் கூட்டுதல், குறித்த நேரத்தில் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் இயந்திரமயமாகக்கலை விவசாயிகளிடையே ஏற்படுத்தி, மண் வளத்தினை பாதுகாத்து, புதிய பாசன ஆதாரங்களை உருவாக்கி, பாசன நீரினை இறைத்திட புதுப்பிக்க தக்க ஆற்றலுக்கான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, விளைவித்த வேளாண் விளை பொருட்களை உரிய விலையின்றி வீணாவதை தடுத்து, விவசாயிகள் மதிப்புக்கூட்டி இலாபம் ஈட்ட முக்கிய பங்காற்றுகிறது வேளாண்மைப் பொறியியல் துறை-
மேலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கம் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் (40% தமிழக அரசு மானியம் மற்றும் 30% ஒன்றிய அரசு மானியம்) அமைத்து கொடுக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டில் 84 எண்கள் (5 HP AC, 5 HP DC, 7.5 HP DC, 10 HP AC, 10 HP DC) ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94.47 இலட்சம் மற்றும் ஒன்றிய அரசின் பங்கு ரூ.70.85 இலட்சம் ஆகும். இதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20% கூடுதல் மானியத்தொகை ரூ.8.42 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் (2022-23) 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இவைகள் மட்டுமின்றி சூரிய கூடார உலர்த்திகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை உலர்த்திட பசுமை குடில் வகையிலான 400 முதல் 1000 சதுர அடி பரப்பு கொண்ட பாலிகார்பனேட் தகடுகளை கொண்ட சூரிய கூடார உலர்த்திகள் 40% மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது. சூரிய சக்தி மின்வேலி அமைத்தல் திட்டத்தின் கீழ், வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திட சூரிய சக்தி மின்வேலி (5 வரிசை, 7 வரிசை, 10 வரிசை) 40% பின்னேற்பு மானியத்துடனும், மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்டுகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு அல்லது புதிதாக அமைக்கப்படும் கிணறுகளுக்கான புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு மோட்டாரின் மொத்த விலையில் 50% அல்லது ரூ.10,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.மேலும், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வாங்குவதற்கு 40% மானியம் அளிக்கப்படுகிறது. வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் இயந்திரங்களை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 40% மானியத்திலும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியத்துடனும் வழங்கப்படுகிறது.இந்த முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் நிறுவுவதன் மூலம் விவசாயிகள் தாங்கள் திருப்திகரமாக பயனடையும் வகையிலும், சரியான முறையில் பாசனம் செய்யவும், பாசன பரப்பினை அதிகப்படுத்தி டீசல் செலவினை சேமிக்க முடிகிறது. நேரம் மீதமாகிறது எனவே, விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியை தேர்ந்தெடுத்து, உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருவாய் பெறவும் வழி வகை செய்கிறது.1. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயி திருமதி.பேச்சியம்மாள் கூறியதாவது:என் பெயர் பேச்சியம்மாள். என் கணவர் பெயர்.சுப்ரமணி. நாங்கள் நீலகிரி மாவட்டம், உதகை வட்டாரம், இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 5 HP திறன் கொண்ட சூரிய சக்தி பம்பு செட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த எனக்கு 90% மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டு அமைத்து கொடுத்தார்கள்.இதன் மொத்த விலை ரூ..2,73,548/-ல் எங்களது பங்களிப்பாக ரூ.33,254/- மட்டுமே செலுத்தினோம். எங்களது நிலத்தில் தெளிப்புநீர் பாசன அமைப்பு அமைக்கப்பெற்று சூரிய சக்தி பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களுக்கு குறைந்த நீரில் பாசனம் செய்ய முடிந்தது. மேலும் டீசல் வாங்குவதற்கான பணமும், நேரமும் மிச்சமாகிறது. இதன் மூலம் லாபம் ஈட்ட முடிக்கிறது. இதுபோன்று விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.2. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயி திரு.மூர்த்தி கூறியதாவது:என் பெயர்.மூர்த்தி. என் தகப்பனார் பெயர் திரு.செவனன். நாங்கள் உதகை வட்டத்திற்குட்பட்ட இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறோம். எனக்கு 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 5HP திறன் கொண்ட சூரிய சக்தி பம்புசெட் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 70% மானியத்தில் அமைத்து கொடுத்தனர். எங்களது பங்களிப்பாக மொத்த தொகை ரூ.2,73,548/-ல் ரூ.86,652 மட்டுமே செலுத்தினேன். சூரிய சக்தி பம்புசெட்டு அமைப்பதன் மூலம் டீசலுக்கான செலவு மற்றும் நேரவிரயம் குறைந்துள்ளது. மேலும் சூரியசக்தி பம்புசெட்டுடன் தெளிப்புநீர் பாசன அமைப்பினை இணைத்துள்ளதால் குறைவான தண்ணீரில் முழுமையாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து இலாபம் ஈட்ட முடிகிறது. எங்களைப்போன்ற விவசாயிகளின் நலனினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தினை உயர்த்திடும் வகையில் இதுபோன்ற பல்வேறு சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தியதற்காக, நீலகிரி மாவட்ட விவசாயிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *