சட்ட விரோதமாக ஒரு குழந்தை வைத்திருப்பதாக கிடைத்த தகவல்

Loading

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. அரவிந்த் அவர்களுக்கு
கிடைத்த தகவலின்படி வடலூர் சுடர்விழி என்பவர் சட்ட விரோதமாக ஒரு குழந்தை வைத்திருப்பதாக கிடைத்த தகவல் அடிபடையில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு சுடர்விழி என்பவர் சட்டவிரோதமாக குழந்தை வைத்திருப்பதை தெரிந்து அவர் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகார் மனு சம்பந்தமாக வடலூர் காவல் நிலைய குற்ற எண்: 49/23 பிரிவு 363 IPC r/w 81 of JJ Act 2015 படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 1. சுடர்விழி 2. மெகருனிஷா வயது 67 த/பெ அப்துல் சுபான், எண் 1, 7 டே ஸ்கூல் தெரு. வடலூர். குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் 3. ஷீலா வயது 37 க/பெ கஜேந்திரன், எண் 474. ஜே.ஜே. நகர், கீரப்பாளையம். சிதம்பரம் வட்டம் 4. சீர்காழி ஆனந்தன் 5. வடலூர் ஆனந்தன் 6 நந்தினி ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்கு சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  R. இராஜாராம் அவர்களின் உத்தரவின்படி சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர்  B. ரகுபதி IPS, புதுசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வினதா ஆகியோர்களால் இவ்வழக்கு மேல்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மெகருனிஷா, ஷீலா ஆகியோர்களின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . R. இராஜாராம் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. K. பாலசுப்பிரமணியம் IAS அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரிகள் ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *