பெயிண்டுக்கு பதிலாக தண்ணீராலேயே வள்ளுவர் படத்தை வரைந்து ஓவியம்

Loading

பெயிண்ட்கலர் எல்லாம்  வேண்டாம்பா
படம் வரைய தண்ணீர் மட்டுமே போதும்பா
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு
நீரின்றி அமையாது உலகெனின் குறளுக்கு ஏற்ப பெயிண்டுக்கு பதிலாக தண்ணீராலேயே வள்ளுவர் படத்தை வரைந்து ஓவிய ஆசிரியர் விழிப்புணர்வு
 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த  சு. செல்வம் அவர்கள் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெயிண்ட், கலர் ஏதும் பயன்படுத்தாமல்
நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு என்ற குறளுக்கு ஏற்ப  வெறும் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி திருவள்ளுவர் படத்தை வரைந்தார்.
 நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு நீர் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்கிறார்  திருவள்ளுவர்.
உணவின்றி மனிதனால் சிலநாட்கள் வாழ முடியும், ஆனால் நீரின்றி மூன்று தினங்களும் கூட வாழ முடியாது.
நீரின் அளவு குறைந்து வருதல், நீர் மாசடைதல் போன்ற காரணங்களால்  நீர் பாதுகாப்பு  உலகளாவிய ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 உலக நீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மாத்திரமே எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்த முடியும், ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைப்பது நீரை சேமிப்பதற்கான பிரதான  வழியாகும். மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்குபவை காடுகள், ஆகவே காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும் மிகவும் அவசியம் நீரை பற்றிய  பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பெயிண்ட், கலர் எல்லாம்  வேண்டாம்பா நீரின்றி அமையாது உலகெனின் என்கிற திருகுறளுக்கு ஏற்ப தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி திருவள்ளுவர் படத்தை எட்டு நிமிடங்களில்  வரைந்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *