இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்று
இந்தியாவில் அதிகரித்து வரும் இன்ஃபுளுயன்சா தொற்றுக்கு எதிராக நம்மைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மருத்துவ நிபுணர்கள் இந்தியாவில் கடந்த ஆண்டில் மாநிலங்களுள் ஃபுளூ காய்ச்சல் நேர்வுகள் எண்ணிக்கை அதிகமிருந்த இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது இந்தியாவெங்கிலும் இன்ஃபுளூயன்சா பாதிப்புகள் உயர்ந்து வரும் பிரச்சனையை எதிர்கொள்ள இத்தொற்றுக்கு எதிராக பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்தடுப்பு நடவடிக்கை மீது சென்னையில் ஒரு வட்டமேஜை நிகழ்வை அபாட் நிறுவனம் நடத்தியதுஅப்போலோ மருத்துவமனையின் தொற்றுநோய்கள் துறையின் முதுநிலை நிபுணரும், கேப்ஸ்டோன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் மருத்துவ இயக்குனருமான மருத்துவர் வி. ராமசுப்ரமணியன் இந்த வட்டமேஜை நிகழ்வில் தெரிவித்ததாவது: “இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன்ஃபுளூயன்சா நேர்வுகளில் தமிழ்நாடு மாநிலம் எண்ணிக்கை அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது. அதுவும் 2023 ஜனவரி மாதத்தில் இது மிக அதிகமாக இருந்தது. இன்ஃபுளூயன்சா பற்றி சரியாகப் புரிந்துகொள்வதும் மற்றும் இந்த பருவகால தொற்று, அதன் சிக்கல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான முன்தடுப்பு நடவடிக்கைகளை அறிந்திருப்பதும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் இன்ஃபுளூயன்சா மரபு வகைகள் மாற்றம் கண்டு வருகின்ற நிலையில் தற்போது சுழற்சியிலுள்ள மரபு வகையின் அடிப்படையில் தடுப்பூசி (வேக்சின்) மருந்துக்கான பரிந்துரைகளை உலக சுகாதார நிறுவனம் அவ்வப்போது வழங்கி வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கப்பெறும் நோயெதிர்ப்புத்திறன் ஒரு ஆண்டுக்குப் பிறகு குறைந்துவிடும் என்பதால், இன்ஃபுளூயன்சாவுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஃபுளுவிற்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதை இது முக்கியமானதாக்குகிறது.”