உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மரம் நடும்விழா…
கொடைக்கானலில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் மரம் நடும்விழா…
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்ற ழைக்கப்படும் கொடைக்கானலில் இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல இடங்களில் மரம் நடுவிழா மற்றும் விழிப்புணர்வு கொண்டாட்டம் முதல் விழாவாக கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் சுமார் 15000க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகளை வனத்துறை சார்பில் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னிலையில் மரம் நடும்விழா தொடங்கப்பட்டது இவ்விழாவில் தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி துணைவேந்தர் அவர்கள் மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்…