உலக காடுகள் தினக் கொண்டாட்டம்*
உலக காடுகள் தினக் கொண்டாட்டம்*
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழக்கோட்டையில் உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி வரவேற்புரையாற்றினார். வானவில் மன்றம் சார்பாக ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா பழம் வழியாக மின்சாரம் தயாரித்தல், மாய முட்டை, இயற்கை நிறக்காட்டிகளை பயன்படுத்துதல், துள்ளிக் குதிக்கும் பந்து தயாரித்தல், தாமிரத்தை சுத்தப்படுத்தும் எளிய வழி போன்ற பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்து அவர்களையும் செய்து பார்க்க வைத்தார்கள். உலக காடுகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மரம் நடுவோம். மழை பெறுவோம். புவி வெப்பமயமாதலை தடுப்போம். பல்லுயிர் தன்மையை காப்போம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். முன்னதாக பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வு நடைபெற்றது. பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். ஆசிரியை அமலதீபா வழிநடத்தினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.