கன்னியாகுமரி மாவட்டம் போவிழிப்தை புணர்வு நிகழ்ச்சி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் போவிழிப்தை புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (21-03-2023) அன்று காலை 9:30 மணி அளவில் பெல்பீ்ஃல்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து  நடைபெற்றது. நாகர்கோவில், துணை காவல் கண்பாணிப்பாளர்  J.நவீன் குமார், I.P.S  தலைமை உரை ஆற்றினார்.  சமூக நல அதிகாரி  R.சரோஜினி மற்றும் நாகர்கோவில், மாவட்டக் கல்வி அலுவலர் R.மோகன்  போதை விளிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினார்.  Dr.J.பிரான்சிஸ் சேவியர் நெல்சன், J.சகாய பிராங்கோ மற்றும்  J.ஷைலஜா செல்வராணி ஆகியோர் போதையைக் குறித்தும், அதன் தீமைகள் குறித்தும், அதிலிருந்து வெளிவரும் முறைகள் குறித்தும் போதை விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினர். பெல்பீஃல்டு பள்ளி தாளாளர்  G.ரஸ்கின் ராய் மற்றும் முதல்வர் Dr.T. ஜேன் கேத்தரின் ஆகியோர் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து பொன்னாடை வழங்கினார்கள். போதை விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இறுதியாக மாணவர்கள் அனைவரும் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  அதில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

0Shares

Leave a Reply