பிரத்யேகமான வீடியோவில் நடிகை  ஷ்ரேயா சரன் கூறியுள்ளார் 

Loading

உபேந்திராவுக்கு அவரது திரைப்பட செட் மிகவும் பிடிக்கும் மேலும் அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்,” என்று ஐ.எம்.டி.பிக்கு வழங்கிய பிரத்யேகமான வீடியோவில் நடிகை  ஷ்ரேயா சரன் கூறியுள்ளார்
ஐ.எம்.டி.பியின் ஒரிஜினல் தொடரான ‘ஒருவரை ஒருவர் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்’ நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது வாழ்க்கை குறித்த உண்மையான விவரங்களை வெளிப்படுத்துவதாலும்,
தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதாலும், மேலும் தங்களது திரைப்படங்கள் குறித்த பிரத்யேகமான திரைக்குப் பின்னால் நடந்த விவரங்களைப் பற்றி பேசுவதாலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அவர்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் அதிக நெருக்கமாக உணரச் செய்கிறது! கன்னடத் திரைப்படமான கப்ஸாவின் வெளியீட்டிற்கு முன்னால் இந்த திரைப்படத்தை எடுத்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அதேபோல் ஒருவரைப் பற்றி மற்றறொருக்கு முதல் முறையாக ஏற்பட்ட அபிப்பிராயங்கள் பற்றியும் உபேந்திரா மற்றும் ஷ்ரேயா சரன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
தான் முதல்முறையாக உபேந்திரா அவர்களுடன் திரையில் தோன்றியது பற்றிப் பேசிய ஷ்ரேயா அவர்கள், “அவரை முதல் முறையாக நான் சந்தித்தபோது நாங்கள் நமாமி நமாமி என்ற பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தோம். திரு சின்னி சார் அவர்கள் அதற்கு அற்புதமான நடனம் அமைத்திருந்தார். உபேந்திரா சார் அவர்கள் செட்டிற்கு வரப்போவதாக திரைப்படப் பணியாளர்கள் பேசிக்கொண்டனர், என்னைச் சுற்றியுள்ள அனைவரும் அவரைப் பற்றி பேசினார்கள். நான் எனது நடன முறையை கற்றுக்கொண்டிருந்த போது அவர் திடீரென்று உள்ளே வந்தார். நான் திரும்பி அவரது அரசு உடையில் அவரைப் பார்த்தேன் ஏனெனில் அவர் அந்த பாடலுக்காக அரச உடை அணிந்திருந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அமைதியாகவும் தீவிரமாக யோசித்த நிலையிலும் இருந்தாலும் அவர் புன்னகை செய்து கொண்டிருந்தார்.
 அவர் மிகப்பெரிய புன்னகையுடன் உள்ளே நுழைந்தார் அத்துடன் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு திரைப்பட செட்டை மிகவும் பிடித்திருந்தது மேலும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். அவரைப் பொறுத்தவரை மற்றவர்கள் பாராட்டுவதை ஏற்பது என்பது அவருக்கு கடினமான செயலாகும் ஆனால் மற்றவர்களை அவர் எளிதாக பாராட்டிப் புகழ்வார், இந்த குணமே அவரைப் பற்றி நமக்கு எவ்வளவோ விஷயங்களை உணர்த்துகிறது,” என்று கூறினார்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *