20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

Loading

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் விளக்கேந்தி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்றது.இதில் மாநிலத் தலைவர் இளசை கணேசன்,பொது செயலாளர் கா.குரு  தலைமையிலும் வி.எம் தமிழன் வடிவேலு,மாநில துணை தலைவர்,ஜி.நாகராஜன் மாநில துணைச் செயலாளர்,ஜுபிடர் ரவி மாநிலச் துணை செயலாளர்,அயன்புரம் ஆர். பாபு மாநில துணை செயலாளர்,ஆ.வி.கன்னையா,மாநில பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தும் ஏ.ராஜா தென்னிந்திய பத்திரிகையாளர்கள் மன்றம்,சி.கதிர்வேல் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட்,டாக்டர் சோபன் பாபு கடலூர் பிரஸ் – மீடியா பத்திரிகையாளர் சங்கம்,கவிஞர் த.சுமித்திரா அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம், எஸ்.ராஜா முகமது மற்றும் அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்,எம்.எல்.ரூபன் ஜெர்மியா யூனிவர்சல் பிரஸ் – மீடியா அசோஸியேஷன்,வி.எஸ்.டிமாரிமுத்து தமிழ்நாடு பிரஸ் – மீடியா நிருபர்கள் யூனியன்,தமிழ்பித்தன் தமிழ்நாடு நிருபர்கள் சங்கம்,தாமரை பூவண்ணன் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் ,கருடன் ஆசிரியர் எஸ்.ரமேஷ்,பிரஸ் குமார் தமிழ்நாடு சிறு பத்திரிகையாளர்கள் நலச் சங்கம்,காஞ்சி கருணாகரன் தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள் சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.இந்த  ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள விளக்கேந்தி பார்க்காதே பார்க்காதே பாரபட்சம் பார்க்காதே!அடையாள அட்டை கொடுப்பதில் பாரபட்சம் பார்க்காதே!ஒதுக்காதே ஒதுக்காதே  சிறு பத்திரிகையாளர்களை ஒதுக்காதே!நிறைவேற்று  நிறைவேற்று! பத்திரிகையாளர் கோரிக்கைகளை நிறைவேற்று!மாற்ற வேண்டும் மாற்ற வேண்டும்!அடையாள அட்டை விதிமுறைகளை பொருத்தமாக மாற்ற வேண்டும்! என கோஷம் முழங்கினர்.
நிகழ்ச்சி தொகுப்பளராக ஏ.பால்ராஜ் மாநில துணை தலைவர் கார்த்திக் இந்திய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் நன்றியுரை வழங்கினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *