ஆவின் பால் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் சந்திப்பு

Loading

===========
ஆவின் பால் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் நாசர் சந்திப்பு
தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி பல மாவட்டங்களில் பால் வினியோகமும் மிகவும் காலதாமதமாக செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கூட்டுறவு சங்க விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.  இதற்கிடையே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் இன்று முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்தி ருந்தன. அடுத்தடுத்து நடைபெறும் இந்த பதட்டம் காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை அழைத்து ஆவினில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களை அழைத்து அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *