தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமின்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18-03-2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து ச.வளர்மதி மாவட்ட ஆட்சியர் கல்லூரியினை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டனர். உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், மகளிர் திட்டஇயக்குநர் நானிலதாசன் வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஜி.கே. உலக பள்ளி நிர்வாகிகள் உடனிருந்தனர்.