எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திமுக முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராடுவோம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேச்சு.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மதுரையில் பொய் வழக்கு போட்ட விடியா தி மு க அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் முன்பு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தமிழகத்தில் நான்கரை ஆண்டு காலம் சிறந்த ஆட்சி செய்த முன்னாள் முதலமைச்சரும் இன்று தமிழக மக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மாற்றுக் கட்சியை சேர்ந்த ஒரு குண்டர் கொடுத்த பொய் புகாரை ஏற்று முன்னாள் முதலமைச்சர் என்றும் பாராமல் மதுரை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கின்றேன். ஜனநாயகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற எதிர்க்கட்சியான அதிமுகவின் குரல்வலையை நெரிக்கும் செயலாக இது உள்ளது. இன்று இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறாவிட்டால் விரைவில் தூத்துக்குடியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதோடு அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்வோம் என்றும் கூறினார். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு, கொறடா மந்திரமூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாநகரப் பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், சேவியர், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் யு.எஸ். சேகர், டேக் ராஜா, கே.ஜே.பிரபாகர், பில்லா விக்னேஷ், ஜே.ஜே. தனராஜ், சுதர்சன் ராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன்ஆதித்தன், ஆன்ட்ருமணி, பிள்ளை விநாயகம், கோமதி மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர் செரீனா பாக்கியராஜ், துணை செயலாளர் ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், காசிராஜன், செம்பூர் ராஜ் நாராயணன், ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், திருச்செந்தூர் நகரச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சுரேஷ் பாபு, உரக்கடை குணசேகரன், வக்கீல்கள் முனியசாமி, சரவணபெருமாள், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வலசை வெயிலுமுத்து, அலெக்ஸ் ஜி, பிஜேசி சுரேஷ், பேரூராட்சி கழக செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுக நயினார், கிங்ஸ்லி ஸ்டார்லிங், செந்தமிழ் சேகர், செந்தில் ராஜ்குமார், துரைச்சாமி ராஜா, வேதமாணிக்கம், முன்னாள் கவுன்சிலர்கள் செண்பக செல்வன், சுடலைமணி, முத்துமதி, தமிழரசி, டேவிட் ஏசுவடியான், நிர்வாகிகள் எஸ்.கே.மாரியப்பன், ஹார்பர் பாண்டி, எ.கே.மைதின், எப்ராயீம், ஜான்சன்தேவராஜ், டெலஸ்பர், சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, கணேசன், கே.கே.பி. விஜயன், ராஜன் கண்ணா, டைகர் சிவா, திருமணி, பண்டாரவிளை பால்துரை, திருத்துவசிங், தினகரன், வட்ட செயலாளர்கள் சந்திரசேகரன், சொக்கலிங்கம், கொம்பையா, வெங்கடேஷ், அருண் ஜெயக்குமார், மணிவண்ணன், நயினார், நிக்கோலஸ், ராஜன், ஜெகதீஸ்வரன், மணிகண்டன், அந்தோணிராஜ், நவ்ஷாத், ஈஸ்வரன், ஜெயக்குமார், உலகநாதப்பெருமாள், பூர்ண சந்திரன், செல்வராஜ், மாரிமுத்து, சுப்பிரமணி, பொன்னுத்துரை, மகளிர்கள் சண்முகத்தாய், நாசரேத் ஜூலியட், பத்மாவதி, பானுமதி, முத்துலட்சுமி, மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விஜயன், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் நகர செயலாளர் பால்துரை, குலசை சங்கரலிங்கம், திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மகாலிங்கம், பூந்தோட்டம் மனோகரன், கேடிசி பெரியசாமி, சரவணன் வேல், மெத்தை ஆறுமுகம், ரமேஷ், முத்துக்குமார், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார், போக்குவரத்து பிரிவு ஆதிராஜ் வெள்ளையா, யுவன் பாலா, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, ஆனந்த் உள்ளிட்ட பெருந்திரளானோர் உடன் இருந்தனர்.