தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Loading

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பு தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.தருமபுரி கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கே.எஸ். சரவணன் அனைவரையும் வரவேற்றார்.தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக தருமபுரி பாமக மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாநில அமைப்பு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில், வன்னியர் சங்க மாநில செயலாளர் இரா.அரசாங்கம் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், பி.சாந்தமூர்த்தி, மாவட்ட அமைப்பு தலைவர் கே.இ.கிருஷ்ணன், மாநில பசுமைத்தாயக துணை செயலாளர் க.மாது, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஒ.கே.சிவக்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ஜெ. ராஜா மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பு தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.தீர்மானம் 1வருகின்ற 19.03.2023 அன்று, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமங்கள் தோறும் பாமக கட்சி கொடியேற்றி, கிளை நிர்வாகிகளை சந்திக்க வருகைத்தரும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அய்யா அவர்களை சிறப்பான முறையில் வரவேற்று, நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.தீர்மானம் 2இம்மாத இறுதியில், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் நிதி நிலை அறிக்கையில் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் – காவிரி உபரிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானிக்கப்பட்டது.தீர்மானம் 3 தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் வலுவான கிளை அமைப்பை ஏற்படுத்தி அனைத்து கிளைகளிலும் கொடியேற்ற தீர்மானிக்கப்பட்டது.தீர்மானம் 4
கோடைகாலம் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது சாலை மறியல் செய்யும் நிகழ்வும் நடைபெற்று வருகின்றன. இதனைக்கருத்தில் முன்னெச்சரிக்கையாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வகையில் சீரான குடிநீர் வழங்க போர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வனவிலங்குகள் திண்ணீர் தேடி வனப்பகுதிகளின் அருகேயுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு நுழைவதை தடுக்கின்ற வகையில் வனப்பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை அமைத்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.தருமபுரி – அரூர் வழியாக திருவண்ணமாலை வரை சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழிப்பாதை சாலையாக மாற்றியமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இச்சாலையில் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் தின்னப்பட்டி பிரிவு சாலை மலைப்பகுதியில் சாலை வளைந்து உள்ளன. வளைந்த சாலையாக உள்ளதால் அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக இப்பகுதி உள்ளது. சாலை விபத்துக்களை தடுக்கின்ற வகையில் இப்பகுதி சாலையை நேராக்கி, அகலப்படுத்தி விபத்தில்லா சாலையாக அமைக்க இக்கூட்டம் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *