20 வருடங்களுக்கு மேலாக கள்ளச்சாராயம் காட்சி விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தனர்.விளம்பார் கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கள்ளச்சாராயம் காட்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க,எங்கள் ஊராட்சியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த 1.வெங்கடேசன் த/ பெ கலியன் 2. கௌரி த/பெ கலியன் 3. பழனிவேல் ஆகிய மூன்று நபர்களும் வீட்டிலேயே கள்ளச்சாராயம் காட்சி விற்பனை செய்து வருகிறார்கள். மேற்படி நபர்களிடம் கள்ளச்சாராயம் வாங்குவதற்காக பக்கத்து கிராமங்களை சார்ந்த1.தச்சூர், காட்டனந்தால், லட்சியம், மலைக்கோட்டாலம், தென் கீரனூர், வானவ ரெட்டி. போன்ற கிராமங்களில் இருந்து குடிமகன்கள் வருகை புரிவதால் மேற்படி கிராமத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதனால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. மேற்கண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டால் அவர்கள் மீது கற்பழிப்பு தொடர்வதாக மிரட்டி வருகிறார்கள். மேலும் இவர்கள் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை குடித்து வந்த இளம் வயது நபர் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரமும் கள்ளச்சார விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனால் அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு. இவர்களால் ஏற்படுத்தப்படுகிறது கள்ளச்சாராய விற்பனை குறித்து யாரேனும் புகார் அளித்தால் அவர்களை ஆட்கள் வைத்து மிரட்டுவதும் அவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என மிரட்டுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உடனடியாக தலையிட்டு இது போன்ற கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடுமையாக கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொண்டு எங்களது கிராமத்தை கள்ளச்சாராய மற்ற கிராமமாக மாற்றி கேட்டுக்கொள்கிறோம்.