முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Loading

முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க 01.01.2022-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72,000ஃ-ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான சான்றுகள், தமிழ்ப்பணியாற்றி வருவதற்கான தகுதிநிலைச்சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின்வலைத்தளத்திலோ  www.tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவுசெய்ய பெறுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500 மருத்துவப் படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்பெறும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் அளிக்கப்பெற்ற வேண்டுமெனவும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *