குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர். 

Loading

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர். தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த மாதம் 22ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில், கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜெயப்பிரகாஷை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணிக்கு இடது கையில் வெட்டு பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை எஸ்பி பாலாஜி சரவணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
0Shares

Leave a Reply