புதிய தலைவராக சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகுவள்ளியப்பா பொறுப்பு ஏற்றார்
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்எம்ஏ) – சேலம் டிவிஷன் புதிய தலைவராக சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகுவள்ளியப்பா பொறுப்பு ஏற்றார்மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்எம்ஏ) 1956 இல் நிறுவப்பட்டது, இது நாட்டின் மேலாண்மை கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த எம்.எம்.ஏ சேலம் டிவிஷனின் புதிய தலைவராக சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் தியாகுவள்ளியப்பா பொறுப்பு ஏற்றார். இந்த நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் நடைப்பெற்றது.முன்னதாக MMA சேலம் டிவிஷன் தலைவர் திரு. S. மோகன் வரவேற்பு உரையை வழங்கினார், MMA சேலம் டிவிஷன் அறிமுகக் குறிப்புகள் & மேலோட்டப் பார்வையை கேப்டன் R விஜயகுமார், வழங்கினார். VSM (ஓய்வு), நிர்வாக இயக்குனர், MMA, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரவேட் லிமிடெட், இயக்குனர், திரு. C சிவக்குமார், மற்றும் MMA நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோர் முக்கிய குறிப்புரையாற்றினார்கள், ஆக்ஸ்போர்டு பார்மாசூட்டிகல்ஸ் எல்.எல்.சி தலைவர் திரு. ஜோசஃப் ஹாஃப்மைர், சிறப்பு உரையை வழங்கினார். மேலும், MMA சேலம் டிவிஷன் புதிய தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா, துணைத் தலைவர் – சோனா குரூப், நிறுவனர் மற்றும் CEO, சோனா ஸ்டார் இன்னோவேஷன்ஸ் பிரவேட் லிமிடெட், செயல் இயக்குனர், சோனா வள்ளியப்பா குழுமம் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் முன்னணி நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள், தொழில்முனைவோர், முன்னணி நிறுவனங்களின் ஆசிரிய உறுப்பினர்கள், சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்பைத் தொடரும் மாணவர்கள் மற்றும் MMA உறுப்பினர்கள் சேலம் டிவிஷன், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் ஆகியோர் பங்கேற்றனர்.