ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க அலுவலகம்
திருவள்ளூர் மார்ச் 12 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் அனைத்து நவீன வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலக வளாகத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பின், அந்தக் கட்சியின் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர் – பூந்தமல்லி சாலையில் வெங்கத்தூர் ஊராட்சியில் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் ரூ.3 கோடியில் அனைத்து வசதியுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் இடம் தேர்வு செய்து கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பேரில் கடந்தாண்டு கட்டடப்பணிகள் 3 தளங்களுடன் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்தவாரம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.இந்த நிலையில் அந்தக் கட்சியினரின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தை கோட்டப் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான வினோஜ் பி.செல்வம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆனந்தபிரியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கீதாஞ்சலி சம்பத், மாவட்ட தலைவர்கள் அஸ்வின்குமார், செந்தில்குமார், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்திநாயுடு, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேஷ், ஆனந்த பிரியா, மத்திய அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் இரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், கே.ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் பி.ஆர்.மதுசூதனன், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.ஞானவேல் என்ற முல்லை ஞானம், மாவட்ட செயலாளர்கள் பி.பன்னீர் செல்வம், பாலாஜி, மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.டில்லிபாபு. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு.அருண்சுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் சதீஷ்குமார், கடம்பத்தூர் ஒன்றியத் தலைவர்கள் கே.பழனி, கே.ரவிக்குமார், பூண்டி ஒன்றியத் தலைவர் டாக்டர் சுரேஷ், திருவாலங்காடு ஒன்றியத் தலைவர் ஆர்.பாண்டுரங்கன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் ஆர்.எம்.லோகேஷ் பிரபு, மாவட்ட செயலாளர்கள் யு.எம்.சுனில், பன்னீர்செல்வம், பாலாஜி, மாவட்ட மகளிரணி தலைவி வாசுகி, செயலாளர்கள் ஜி.ரஞ்சனி, சித்ராதேவி, மாநில செயலாளர்(தரவு பிரிவு) ரகு, கீதாஞ்சலி சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜீவா, ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ், இளைஞரணி நிர்வாகி டில்லி, பூண்டி சண்முகம், பாண்டுரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.இவ்விழாவில் பங்கேற்ற 600 பெண்களுக்கு மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.ஞானவேல் என்ற முல்லை ஞானம், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜி.ரஞ்சனி ஆகியோர் இலவசமாக சேலைகளை வழங்கினர்.