சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்,சிறப்பாக நடைபெற்றது.

Loading

சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும்மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகத்தில் நடைப்பெற்றது  ACHIEVERSCONNECT 2023′ நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பயின்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்பொறுப்பில்இருக்கும் மாணவர்களும் முன்னாள் சாதனை மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.நிகழ்விற்கு கணினித் தொழில்நுட்பவியல் துறையின் தலைவர் முனைவர் அகஸ்தியர் அவர்கள்வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை ‘ஆபெக்ஸ் லாஜிஸ்டிக்’ நிறுவனத்தின் இந்தியதுணைக்கண்டங்களின் தலைவர் திருமதி. சுபஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகஅழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். எஸ்.ஆர்.எம்.நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல்புலத்தின் நிர்வாகவியல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.திலீபன் அவர்கள் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டதன் நோக்கத்தையும் எஸ்.ஆர்.எம். நிறுவனம் உலகஅளவில் ஒளிர்வதற்கு முன்னாள்
சாதனை மாணவர்களே காரணம் என்றும் எடுத்துரைத்து வாழ்த்துரையாற்றினார்.கல்வியியல் துணைத்தலைவர் முனைவர் வே.சரவணன் அவர்கள் மாணவர்களின் அறிவுவளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் உதவும் வகையில் பாடத்திட்டங்களில் பல புதுமைகள்புகுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அறிவியல்மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர் மேஜர், முனைவர் எம்.வெங்கட்ரமணன், அவர்கள்முன்னாள் மாணவர்களை வாழ்த்திச் சிறப்பானதொரு தலைமையுரை ஆற்றினார்.நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திருமதி. சுபஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் மாணவர்கள் கல்வியில்மட்டுமின்றி சமூகத்தில் தங்களது தகுதியை வளர்த்துக்கொள்ள திறமையுடன் செயலாற்றவேண்டும் என்று வழிகாட்டிச் சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் சாதனைமாணவர்களுக்கும் அனைத்துத் துறைகளிலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றமாணவர்களுக்கும் வெற்றிக்கோப்பைகள்வெற்றிக்கோப்பைகள் பரிசளிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து முன்னாள்மாணவர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர். நிறைவாகஅறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சாய்சித்ரா
அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *