திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கம சார்பில உலக மகளிர் தின விழா
பண்ருட்டி. மார்ச்,10 – கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க ஆட்சி மன்ற குழு தலைவர் தமிழ்ச்செம்மல் முனைவர் இரா. சஞ்சீவிராயர், தலைமை தாங்கினார். சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிஞர் ராஜா, வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தலைவர் க. கதிரவன், நோக்க உரை ஆற்றினார். சங்க துணை செயலாளர் அழகை .தாஷ், சங்க பொதுச் செயலாளர் ரத்தின ஆறுமுகம் , சங்க பொருளாளர் பெ. அய்யனார், சங்க நிர்வாக செயலர்கள் வீ.லோகநாதன், சங்க இயல் இசை நாடக மன்ற இயக்குனர் சீனு.கிருஷ்ணமூர்த்தி, சங்க நிர்வாகிகள் து.ராஜா, அத்திவரதர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி நகர மன்ற தலைவர் க.இராஜேந்திரன், விழாவில் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி.பெர்டில்லா நோபர்ட், அவர்களுக்கு கருணை கடல் விருதும் , பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆர்.அமலி, அவர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருதும் , பண்ருட்டி நகர மன்ற உறுப்பினர் ப.சண்முகவள்ளி பழனி, அவர்களுக்கு கலைஞர்.மு.கருணாநிதி. புதுமைப் பெண் விருதும், பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர் ச.சரண்யா அவர்களுக்கு அண்ணா விருதும் வழங்கி வாழ்த்தி பேசினார். நிறைவாக சங்கத் துணைத் தலைவர் கவிஞர்.சே.அரிஆனந்த், நன்றி கூறினார்.