3-காட்டு யானைகள் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு*
*பாலக்கோடு அருகே இரண்டு குட்டி யானைகளுடன் சுற்றி திரிந்த 3-காட்டு யானைகள் விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு*தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50) இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஒயர்கள் அமைத்து உள்ளார். இந்த மின் ஒயர்கள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.அந்த வழியாக இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 5-காட்டு யானைகூட்டம் மின்சார ஒயரில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2-பெண் யானை மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யாணைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது. மேலும் வனத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம விவசாய நிலத்திற்கு வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனபகுதிகளுக்கு விரட்டாமல் வனத்துறைனர் போக்கு காட்டியும் அலச்சியமாக செயல்பாட்டால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா காட்டு யானையும், சில நாட்களுக்கு பிறகு கூலி தொழிலாளி ஒருவரும் மின்சாரம் தாக்கி விவசாய நிலத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் பாலக்கோடு வனத்துறையினர் விவாசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.