பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமார், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை) ராஜ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி. பிரியா, உள்ளே உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.