வேலூரில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு கூலிங் கிளாஸ்.

Loading

வேலூரில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு கூலிங் கிளாஸ்.வேலூர் மாவட்டம் என்றாலே வெயிலுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் வேலூரில் கோடை வெயில்சுட்டெரிக்கதொடங்கிவிட்டது.இந்நிலையில் கடும் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு   கண்களை முழுமையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும் வகையில் கூலிங் கிளாஸ் ஆகியவற்றை நேற்று காலை வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் நடந்த  நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் வேலூர்  வடக்கு  காவல் ஆய்வாளர் சீனிவாசன், வேலூர் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் நாகராஜன்  காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன், மற்றும் ஆய்வாளர்கள்  தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply