பாட்டாளி மக்கள் கட்சியின் மனம் விட்டு பேசுங்கள் நிகழ்ச்சி சேலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

Loading

சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் மனம் விட்டு பேசுங்கள் நிகழ்ச்சி சேலத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றதுதமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை பாமகவிற்கு சாதகமாக உள்ளது என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே உற்சாக உரையாற்றினார்.சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சேலம் உருக்காலை  செல்லும் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றதுமேடையில் நின்றபடி பாமக தொண்டர்களை தனித்தனியாக அழைத்து நிறை குறைகளை கேட்டு அறிந்து அவர்களுடன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்அப்போது உரையாற்றிய பாமக தலைவர் தற்போது நிலவிவரும் தமிழக அரசியல் சூழ்நிலை பாமகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது என்றார்திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை ஆட்சியை கைப்பற்றுவதில்லை அதே போல அதிமுகவில் பிளவு ஏற்பட்டு பல அணிகளும் பிரிந்து செயல்பட்டு வருகிறது. கருணாநிதி ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லாத நிலையில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதுஇதுவே பாமகவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளதால் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்தானது அனைவரும் அறிந்த ஒன்றே. உலகமே அறிந்த இடைத்தேர்தல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்
ஒரு மாத கணக்காக அமைச்சர்களும் அந்தந்த கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு இருந்த நிலையில் பாமக தொண்டர்கள் மட்டும் அயராது கட்சிப் பணி ஆற்றில் வந்தனர் அதேபோல தானும் மருத்துவர் ராமதாஸ் மாநில பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வந்ததை குறிப்பிட்டார்அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குள் பாமக ஆற்றை வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை பரவலாக கொண்டு சேர்க்க தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்பாட்டாளி மக்கள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். விஜயராசா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில செயலாளர் மு கார்த்தி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் ,மாவட்ட தலைவர்கள் இராசரத்தினம், முருகேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கண்ணையன் மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ் ,மாநில பசுமைதாயக ிணை செயலாளர் சத்ரியசேகர்,வன்னியர் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநகர வன்னியர் சங்க செயலாளர் R.K.சிவா மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அமைப்பு தலைவர்கள் இராஜமூர்த்தி,சரவணகந்தன் மாவட்ட அமைப்பு செயலாளர்கள்செவ்வைஅன்புகரசு,செல்வம்,உழவர்பேரியக்க மாவட்ட செயலாளர் முருகன்,,பொன்னுவேலு, வேல்முருகன்,இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் சுமன்,இரத்தினவேலு,மாவட்ட துணை தலைவர்கள் சீலியம்பட்டியார் முருகேசன்,அருண்குமார் உள்பட நிர்வாகிகள் பல இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *