திராவிட மாடல் ஆட்சியில் தினந்தோறும் திட்டங்கள் தீட்டுவது தான் என்னுடைய பணி: முதலமைச்சர் பேச்சு

Loading

திராவிட மாடல் ஆட்சியில்\, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து ஆற்றிய உரை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினருடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதில் மிக முக்கியமான ஆலோசனைதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி வழங்குவது!இப்படி அறிவித்தால், ஏற்கனவே நலிவில் இருக்கக்கூடிய போக்குவரத்துத் துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் இதனை அறிவித்தால் இலட்சக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும் என்று நான் சொன்னேன்.தேர்தலில் வென்றோம். பதவி பிரமாணம் எடுப்பதற்கு முன்னால், என்னென்ன திட்டம் அறிவிக்கலாம் அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். உடனே நான் சொன்னதுமகளிருக்குஇலவசபேருந்துபயணம்தான”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன் கோட்டைக்குச் சென்று நான் கையெழுத்து இட்ட முதல் கோப்பு மகளிருக்கு பேருந்து கட்டணம் ரத்துஇதுநாள் வரையில்,236 கோடிப் பயணத்தை பெண்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக, பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இன்றைய தினம் நமது ஆட்சிக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கித் தரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது. அடுத்து கையெழுத்து ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்து அதையும் மகளிருக்காக ஏற்படுத்தித் தந்தோம்.  அதற்கு அடுத்த கையெழுத்து எது என்று கேட்டீர்களானால், கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்களுடையவாழ்வாதாரம்பாதிக்கப்பட்டது.அதனால்,5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அன்றைக்கு நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால், நான் முதமைச்சராக பொறுப்பேற்றவுடன் 4000 ரூபாய் வழங்க இரண்டாவது கையெழுத்து போட்டேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அது அமைந்தது.இந்த வரிசையிலேதான், என்னுடைய கனவுத் திட்டமான இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக இருப்பது‘நான்முதல்வன்’திட்டம்கழக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான தொழில் நிறுவனங்களை சார்ந்திருக்கக்கூடிய முதலீடுகள் வந்து சேர்ந்தன. அப்போது பல்வேறு தொழிலதிபர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கினாலும் அதில் பணியாற்ற திறமையான இளைஞர்கள் கிடைப்பது இல்லை என்று தொழிலதிபர்கள் சிலர் என்னிடத்தில் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.  அதைக் கருத்தில் கொண்டு என் மனதில் உருவான திட்டம்தான் நான் முதல்வன் என்ற திட்டம்.தமிழ்நாட்டு மாணவர்களை – இளைஞர்களை கல்வியில் – அறிவாற்றலில் – சிந்தனைத் திறனிலில் – பன்முக ஆற்றலில் முன்னேறியவர்களாக ஆக்குவதற்காக இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைத்தேன். இந்த ஓராண்டுகாலத்தில் 1300-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியில் கல்லூரிகளைச் சார்ந்திருக்கக்கூடிய 17 இலட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகளை பயின்றும், பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு இளைஞர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம்! ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இதுவரையில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். 2563 கோடி ரூபாய் மதிப்பிலான ஊரக குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  மழையின் காரணமாக நீர்வளம் பெருகி உள்ளது.  வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவில் வேளாண் பரப்பு அதிகமாகி, விளைச்சலும் அதிகமாகி இருக்கிறது. நாம் செயல்படுத்திவரக்கூடிய திட்டங்களால் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை மிகுந்த ஊக்கத்தை அடைந்து வருகின்றன.18,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 446 குடிநீர்த் திட்டப் பணிகளும், 4499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்களும் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம்நிர்வாகஒப்புதல்வழங்கப்பட்டுள்ளது.49,385கோடிரூபாய்மதிப்பீட்டில்வளர்ச்சித்திட்டங்கள்தீட்டப்பட்டுள்ளன.பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற முதல் கையெழுத்தாகட்டும், அடுத்து அறிவிக்க இருக்கின்ற மகளிருக்கான உரிமைத் தொகையாகட்டும், அனைத்துமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஏழு முக்கியமான திட்டங்களை இன்றைக்கு நான் தொடங்கி வைக்கிறேன்.நாளைமார்ச்1,என்னுடைய70ஆவதுபிறந்தநாள்இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன்.’அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?’ என்று கேட்டபோது,’அரசியலில்தான்நிச்சயம்நான்இருந்திருப்பேன்’என்றுபதில்சொன்னவன்நான்அரசியல் என்பதை அதிகாரம், என்பதாக இல்லாமல்,  அதனைக் கடமையாகவும் தொண்டாகவும் சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் தந்தை பெரியாரும் – பேரறிஞர் அண்ணாவும்- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் – இனமானப் பேராசிரியரும்இவர்களது வழித்தடத்தில் வந்திருக்கக்கூடிய நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எல்லாக் காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பதுதான் பொதுவான இலக்கு!அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து துவக்கி வைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் ‘தினந்தோறும் திட்டங்கள்’ என்பதுதான் என் திட்டம்!  அதாவது, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி! இவ்வாறு அவர் பேசினார், இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்,

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *