காங்கிரஸ் கட்சிக்காக வீட்டிலிருந்தே பிரசாரம் செய்யும் மாஜி போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி
வீட்டில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்கிறேன் என்று முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி அனுசியா டெய்ஸி தெரிவித்தார்,ராஜீவ் நட்பகம் சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு முன்னாள் தலைவர் அப்துல்சமது பிறந்தநாள் விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை ராஜீவ் நட்பகம் அலுவலகத்தில் பிரேம்பால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, கவிஞர் ராமலிங்கஜோதி, தொண்டன் சுப்ரமணி, ரமேஷ்கண்ணா, ஐஸ் அவுஸ் தியாகு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர், ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது தனது விரல்களை இழந்த அனுசியா டெய்ஸி பங்கேற்று பேசினார், அப்போது அவர் பேசுகையில், தாய் இந்திராகாந்தியை இழந்த குடும்பம், மகன் ராஜீவ்காந்தியை இழந்த குடும்பம் என்று நாட்டுக்காக தியாகம் செய்த கட்சி, காங்கிரஸ். இப்போது ராகுல்காந்தி தேசத்திற்காக தாடி வளர்த்து நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார், அவரது பயணம் வெல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை 63 வயது கிழவி, நானே காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறேன், அதுவும் வீட்டிலிருந்தே, ஏன் இளைஞர்கள் வரக்கூடாதுஎன்னை எவ்வளவோ மிரட்டி பார்த்தார்கள், அதற்கெல்லாம் நான் பயப்படவில்லை. யூடியூப் மூலம் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறேன், என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள், காங்கிரசார் தங்களது குடும்பத்தினரை கட்சிக்கு அழைத்து வரவேண்டும்,குடும்பத்தில் ஒருவரையாவது அழைத்து வரவேண்டும், பெண்கள் அரசியலுக்கு வருவதை கேவலமாக பார்க்கும் நிலை இன்னும் இருக்கிறது, உங்களது சகோதரிகளை காங்கிரஸ்க்கு அழைத்து வாருங்கள் என்றார், முன்னதாக தியாகராயர் கல்லுாரி அருகில் இருந்து காங்கிரஸார் பங்கேற்ற ஊர்வலத்தை முன்னாள் எம்எல்ஏ சோளிங்கர் அருள் அன்பரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்த ஊர்வலம் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே நிறைவடைந்தது, ஊர்வலத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்