கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது
![]()
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நகராட்சி அருகே உள்ள கருமாரியம்மன் கோவிலில் ஆற்காடு தொழிலதிபரும், திமுக மாவட்ட பொருளாளருமான ஏ.வி.சாரதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி சரவணன், பாபு, ஊ.ம.த. ராமன் தலைமையிலும், இளங்கோ, கார்த்தி, ஜெயராஜ், பாலு, ராஜூவ்காந்தி மற்றும் நிர்வாகிகள் ரோஷன், வசந்த், ஹேமகுமார், தினேஷ் மற்றும் மகளிரனியினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. ஆற்காட்டில் தொழிலதிபரும் சமூக சேவகருமான ஏ.வி.சாரதி வருகை தந்து பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் கரங்களால் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அன்னதானங்கள் வழங்கப்பட்டு தாய்மார்களுக்கு வஸ்திரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

