போலி வழக்கில் டெல்லி துணை முதல்வர் கைது
போலி வழக்கில் டெல்லி துணை முதல்வர் கைது கண்டித்து ஆம்ஆத்மிகட்சி தமிழக தலைவர் வசீகரன் தலைமையில் !சென்னை திநகர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லி மக்களுக்கு கல்வி புரட்சியின் தந்தையாக விளங்கி வரும் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை பொய் வழக்கில் கைது செய்து டெல்லி மக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கையில் பதாகைகளுடன் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரை விடுதலை செய்யவில்லை என்றால் இந்தியா முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம் என்ற பல்வேறு கோஷங்களை முன்வைத்தனர் இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொது செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிரணி செயலாளர் ஸ்டெல்லா மேரி,மாநில மகளிரணி பொருளாளர் கைசர்,மாநில மனித உரிமை பிரிவு செயலாளர் AT. முருகன், வடசென்னை மாவட்ட தலைவர் பாரூக், சோபியா பாமா ராணி திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தலைவர் வினோத்குமார்,தென் சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆரிப், மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்