ATM-மைய பொறுப்பாளர்களை நேரில் அழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தபட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வங்கிகளின் மேலாளர்கள், மற்றும் ATM-மைய பொறுப்பாளர்களை நேரில் அழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் கலந்து கொண்டு வங்கிகள் மற்றும் ATM பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகள் மற்றும் ATM- மையங்ககின் மேலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நேரில் அழைத்து கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.1. அனைத்து வங்கி ATM களிலும் பாதுகாப்பு காவலர்களை நியமிக்க வேண்டும். 2. CCTV கேமரா ATM-ன் வெளிபுறம் மற்றும் உட்புறத்திலும் சரிவர இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். 3. ATM-ன் கதவு பக்க சுவர் மேற்கூரை ஆகிய இடங்களில் Sensor-கள் பொருத்தப்பட்டு யாரேனும் ATM-ன் கதவு, மேற்கூரை மற்றும் பக்க சுவர் ஆகியவற்றை உடைக்க முயன்றால் அபாய ஒலி அடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4. மேற்படி Sensor-க்கு UPS- உடன் கூடிய மின் இணைப்பு வழங்கப்படுதல் வேண்டும். மின் இணைப்பை துண்டித்தால் உடனடியாக அபாய ஒலி எழுப்புவதை உறுதி செய்ய வேண்டும். 5. ATM இயந்திரத்திலேயே சிறிய அளவிலான சாதாரணமாக பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 6. ATM மையங்களில் Fire Alarm கட்டயமாக பொறுத்தி இருக்க வேண்டும்.7. யாரேனும் ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்டால் உடனடியாக காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் செல்லும் படி மென்பொருளை வடிவமைக்க வேண்டும். 8. ATM மையங்களில் வெளிச்சத்திற்காக போதுமான மின் விளக்குகள் அமைத்து இருக்க வேண்டும்.9. ATM-களில் பணம் நிரப்ப பணியமர்த்தப்படும் நபர்களை பற்றிய விபரத்தினை காவல்துறையிடமிருந்து நன்னடத்தை சான்று பெற்ற பின்னரே பணியமர்ந்தப்பட வேண்டும். எனவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தபட்டது.