50,000/- ரூபாய் பணத்தின் உரிமையாளரை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
தவறுதலாக ஏடிஎம் –ல் முழுமையாக டெபாசிட் செய்யாமல் விட்டுச் சென்ற 50,000/- ரூபாய் பணத்தின் உரிமையாளரை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.கடந்த 24.02.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு.ப.செந்தில்முருகன் என்பவர் கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் இயங்கிவரும் ஆக்சிஸ் வங்கி –ல் பணம் எடுக்க சென்ற போது டெபாசிட் மிஷின் –ல் யாரோ தவறுதலாக முறையாக 50000/- ரூபாய் பணத்தை செலுத்தாமல் சென்றுள்ளது தெரியவரவே, மேற்படி பணத்தை எடுத்துவந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்தார். காவல்துறையின் தீவிர விசாரணையில் கடலூர் மாவட்டம் கோண்டூர் அசோக்குமார் த/பெ ரங்கசாமி என்பவர் தான் அன்று இரவு 08.35 மணிக்கு தவறுதலாக முழுமையாக பணம் செலுத்தாமல் சென்றதை உறுதி செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.சண்முகம் அவர்களால் ஆக்சிஸ் வங்கி ஊழியர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கபட்டது.மேலும் ஏடிஎம் –ல் தவறுதலாக டெபாசிட் செய்யாமல் சென்ற பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த திரு.ப.செந்தில்முருகன் அவர்களின் நேர்மையை பாராட்டி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.சண்முகம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.