410,000 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

Loading

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை கொண்டு வரும் LEADமாநிலத்தில் உள்ள 410,000 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுபாண்டிச்சேரி , 28, பிப்ரவரி 2023: இந்தியாவின் மிகப்பெரிய ஸ்கூல் எட்டெக் யுனிகார்ன் நிறுவனம் ஆன LEAD, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை கொண்டு வந்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. LEAD-ன் NEP அடிப்படையிலான இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டமானது, அதன் சர்வதேச தரத்திலான பாடத்திட்டம், மல்டி-மாடல் கற்பித்தல்-கற்றல் முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் தீர்வுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்கள் பாடங்களை ஆழமான புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெறுவதை உறுதி செய்கின்றன. தற்போது, LEADன்இன்டகிரேட்டட்ஸ்கூல்எட்டெக்சிஸ்டம்,தமிழகம்முழுவதும்400பள்ளிகளில்செயல்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மாநிலத்தில் 1,60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும், 3800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் LEAD மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து, LEAD நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமீத் மேத்தா கூறுகையில், ‘‘இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் தினமும் 6 – 7 மணி நேரம் பள்ளியில் செலவிடுகின்றன. இருப்பினும், பெருநகரங்களில் அதிக கட்டணம் கொண்ட பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மட்டுமே, சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட, உயர்தர கல்வி கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இதற்காக LEAD-ன் இன்டகிரேட்டட் ஸ்கூல் எட்டெக் சிஸ்டம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஆதரவு அளித்து அதிகாரம் தந்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 பள்ளிகள் மற்றும் 2.5 கோடி மாணவர்களுக்கு பயன் அளிக்க வேண்டுமென்ற எங்களின் இலக்கின் ஒரு பகுதியாக தமிழகத்தில் எங்கள் இருப்பை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றார்…
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *