தமிழ்நாடு முதமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை பத்திரம் பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண் சிசுக்கொலையை தடுக்கவும், அவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்வினை அமைத்து, பெண்குழந்தைகளின் மதிப்பினை உயர்த்திடவும், ஏழைக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துதல் மற்றும் பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாகும் முன்பும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக உள்ள ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000/- நிலையான வைப்புத்தொகையும், இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25000/- நிலையான வைப்புத்தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள்பிறந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கும் சிறப்பு இனமாக கருதி தலா ரூ.25,000/- க்கான பத்திரம் வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்தவுடன், மின்விசை நிதி நிறுவனம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும். தமிழக அரசால் துவங்கப்பட்ட திட்டங்களில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 07.05.2021 முதல் 21.02.2023 வரை உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய நான்கு வட்டங்களை சேர்ந்த 497 பயனாளிகள் ரூ.1.24 கோடி மதிப்பில் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தைகளின் தாயார் திருமதி.வித்யா அவர்கள் கூறுகையில்:
என் பெயர் வித்யா. என் கணவர் பெயர் சிவசங்கர். நாங்கள் கோத்தகிரி இட்டக்கல் ஒன்னட்டி பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எனக்கு 10 வயதில் ரக்க்ஷிதா என்ற பெண் குழந்தையும், 3 வயதில் யாஷிதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எங்கள் ஊரில் உள்ள களப்பணியாளர்கள் இரு பெண் குழந்தைகளுக்கு பணம் பெறும் திட்டம் குறித்து அறிவித்தனர். இதன் மூலம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தினை ஏற்று இரண்டு பெண் குழந்கைளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என்ற அடிப்படையில் ஐம்பதாயிரம் பெறுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இந்த தொகையின் மூலம் எங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும் இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த குழந்தைகளின் தாயார் திருமதி. மீனாட்சி அவர்கள் கூறுகையில்: -என் பெயர் மீனாட்சி. என் கணவர் பெயர் யோகேந்திரன். நான் கூடலூர் அம்பலகொல்லி பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார். எங்களுக்கு 10 வயதில் தனுசியா என்ற பெண் குழந்தையும், 3 வயதில் யாஸ்வின் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சமூக நலத்துறையின் சார்பாக இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுவதாக களப்பணியாளர் மூலம் தெரிந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். அதனடிப்படையில் சமூக நலத்துறை சார்பில் இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் பற்று வைக்கப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்பட்டது. இத்தொகையானது எனது குழந்தைகளின் மேல் படிப்பிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, பெண் குழந்தைகளின் நலனை பேணிக்காக்கும் வகையில் இதுபோன்ற பல்வேறு சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தியதற்காக, நீலகிரி மாவட்ட பெற்றோர்கள் மற்றும் பெண் குழந்தைகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.