ஈரோடு கிழக்குதொகுதி வெற்றியை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்போம்
திமுக-காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்ற பொதுதேர்தலை சந்தித்து மகத்தான வெற்றியை பெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டு அமோக வாக்குவித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா காலமான நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதே தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வருகிற 27ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி இறுதி கட்ட பரபரப்பை;கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியை வெற்றிப் பெற செய்ய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எதிர்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தேசிய கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சமூக ஆவலர்கள் என திரும்பிய பக்கமெல்லாம் முக்கிய தலைவர்களின் தலைகளே தென்படுகின்றன. இந்த இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுவதால் ஆளும்கட்சியின் ஒட்டுமொத்த தலைவர்களும் தொகுதி முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 51வது வார்டுக்குட்பட்ட அசோகபுரி, மணல்மேடு, பொதுமக்களிடையே வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பெரியார் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த கலைஞர் நிறைவேற்றி கொடுத்தார். அதே போல் பெண்களின் வாழ்வு முன்னேற மகளிர் சுயஉதவி குழு ஆரம்பிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33சதவீதம் வழங்கப்பட்டு 50 சதவீதமாக தற்போது உள்ளது அதே போல் அரசு வேலைவாய்ப்பு 30 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையை சட்டமாக்கியது திமுக கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கி கிடந்தது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 21 மாத காலத்தில் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் என்னற்ற பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் என்ற பெருமையில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் எடுத்த கருத்துகணிப்பு தகவல்களில் அறிவித்துள்ளனர். ஆனால் முதலமைச்சர் நான் சிறந்த முதலமைச்சர் என்று இருப்பதைவிட எல்லா துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். என்பது தான் என்னுடைய லட்சியம் என்று பணியாற்றி வருகிறார். தொழில்துறையை உருவாக்கி அதன் மூலம் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறார். ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உலகத்திற்கே வழிகாட்டியாக விளங்குகிறார். முதலமைச்சர் என்னற்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும். என்ற எண்ணத்தில் பணியாற்றி வரும் முதலமைச்சர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாதவற்றையும் நிறைவேற்றி வருகிறார். பொது வாழ்வில் தன்னையே அற்பணித்து கொண்டு முழுமையாக பணியாற்றும் இந்த தொகுதியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டு மொத்தமாக அனைவரும் கைசின்னத்தில் வாக்களித்து முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.