மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

Loading

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்தபயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை மேற்பார்வையிடும் பொருட்டு முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்திடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை அரசு அமைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளைப் பரிவுடன் கவனித்துக் கொள்வதற்கும் அவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் / கொள்கைகள் சிரமமின்றி சென்றடைவதற்கும் இத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்அந்தவகையில், மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவக்குழு மூலமாகவும், இதுவரை 54727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு மேற்பட்ட 30915 மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து மருத்துவச்சான்று பெறுவதை எளிதாக்கும் வகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் மாதம் ஒன்றிற்கு 13 மருத்துவ முகாம்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மூலம் வாரம் திங்கள் மற்றும் வியாழன் அரசு இராஜாஜி மருத்துவமனையிலும், முதல் மற்றும் மூன்றாம் திங்கள் கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலும், மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும், மாதத்தின் முதல் புதன்கிழமை மேலும் அரசு மருத்துவமனையிலும், இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மதுரை மாவட்டத்தில் 24.09.2022 முதல் 12:10.2022 வரை 14 இடங்களில் வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மெகா சிறப்பு முகாம்களில் மொத்தம் 20,058 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையும். வருவாய் கோட்டாட்சியர்கள்தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு அந்தந்த பகுதி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மனவளர்ச்சி குன்றியோர். கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர். தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், பர்கின்சன், தண்டுவடமரப்பு நோய் பாதிக்கப்பட்டோர் மொத்தம் 6808 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023 ஆண்டில் பல்வேறு வங்கிக்கடன் திட்டங்களின் கீழ் 88 நபர்களுக்கு ரூ, 9 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்கள் தொடங்க ரூ.50.000/- மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 10 நபர்களுக்கு தலா 50,000 வீதம் ரூ.5 இலட்சம் நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ்மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமின்றி அவர்கள் குடும்பத்திற்கே காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நவீன செயற்கை அவயங்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது. Universal Disability Identity Card எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள நபர்களில் 24978 நபர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மருத்துவ சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகளை இணைய தளத்தில் தேவையான போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க செய்திடும் வகையில் மதுரை மாவட்டத்தில் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR Fund) மூலம் We are your Voice என்ற நிறுவனத்தின் மூலம் தனியாக மையம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் 628 வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளை தனியார் துறைகளில் தகுதிகேற்ற வேலையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இத்துறையின் மூலம் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு திறன் பேசிகள் (Smart Phones) வழங்கப்படுகிறது. 2021-2022 ஆம் நிதியாண்டில் 522 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் 527 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் திறன் பேசிகள் வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் சிகிச்சைப்பிரிவு வாகனம் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கு இல்லம் தேடி சிகிச்சை வழங்குதல், சிறப்பு பள்ளி சேர்க்கை அளித்தல், இல்லம் தேடி உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. சமூக பாதுகாப்பு திட்டங்களான மாற்றுத்திறனாளிகள் நலவாரியப் பதிவு பெற்றவர்களுக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கிற்கான தொகை, மாற்றுத்திறனாளிகளின் மகன் மற்றும் மகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவி. போன்ற நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுதிறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயணடைந்த உசிலம்பட்டியை சேர்ந்த திரு. ரகு அவர்கள் தெரிவித்ததாவது; என் பெயர் ரகு, நான் உசிலம்பட்டியில் வசித்து வருகிறேன். உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில் எனக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டேன். நடக்க இயலாமலும் வெளியிடங்களுக்கு சென்றுவரவும் இயலாத சூழ்நிலைக்கு ஆளானேன். இதனால், எனது தொழில் பாதிக்கப்பட்டு. மனப்பான்மையுடன் சிரமப்பட்டேன். தாழ்வு மிகவும் இந்நிலையில், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற விண்ணப்பித்தேன். தகுதியின் அடிப்படையில் எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன்மூலம் யாரையும் எதிர்பாராமல் சுயமாக நானே அருகாமைக்கு பயனிக்கமுடிகிறது. எனது கடைக்கு சென்று வரவும் தொழிலை பாதிப்பில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளவும் பேருதவியாக உள்ளது. சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதன் மூலம் மனதளவில் தன்னம்பிக்கையுடன் எனது அன்றாட பணிகளை மேற்கொள்ளமுடிகிறது. இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசிற்கும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பேரையூர் வட்டத்தைச் சேர்ந்த திரு.நவரசன் அவர்களின் தாய் தெரிவித்ததாவது : என் மகன் பெயர் நவரசன். மனவளர்ச்சி குன்றிய 19 வயது சிறுவன். சிறுவயதில் பிற குழந்தைகளைப் போல இல்லாமல் எதிலும் ஆர்வமின்றி தனியாகவே இருந்தான். மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது 48 சதவிகித மனவளர்ச்சி குன்றிய குழந்தை என தெரிந்தது. இதை அறிந்து நான் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு மனவேதனை அடைந்தேன். இருப்பினும், எனது மகனை சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அவனை மிகவும் பரிவுடன் பாசத்தோடு வளர்த்தேன். சிறப்பு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். அவனை வேலைக்கு செல்ல ஊக்கப்படுத்தினேன். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக கேள்விப்பட்டு என் மகனை இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு அழைத்து சென்றேன். அந்த முகாமில் என் மகனின் திறனுக்கேற்ப தனியார் கார் வாஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதம் ரூபாய் 7 ஆயிரத்து 500 சம்பளம் வழங்குகின்றனர். என் மகன் உழைத்து அவனது முதல்மாத சம்பளத்தை என் கையில் கொடுத்தபோது உணர்ச்சி வசத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினேன். மனவளர்ச்சி குன்றிய சிறுவன் என்று ஒதுக்காமல். சமவாய்ப்பு வழங்கி அவனது திறனுக்கேற்ப வேலைவாய்ப்பு பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *