சிவகங்கை மாவட்டத்தில் *துளிர் திறனறிதல் தேர்வு* 2000 மாணவர்கள் பங்கேற்பு…..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட துளிர் திறனறிதல் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், தேவகோட்டை, சாக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள 2000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டார்கள். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 4,5வகுப்புகளுக்கு தொடக்க நிலை எனவும் 6 முதல் 8 வகுப்புகளுக்கு இளநிலை எனவும் 9,10 வகுப்புகளுக்கு உயர்நிலை எனவும் 11,12 வகுப்புகளுக்கு முதுநிலை எனவும் நான்கு பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கநிலை பிரிவில் 300 இளநிலைப் பிரிவில் 1300 உயர்நிலைப் பிரிவில் 400 மேல்நிலைப்பள்ளி பிரிவில் என 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களிடம் அறிவியல் பார்வை, அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடவும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எழுப்பி அதற்கு தீர்வு காண்பதற்கும், புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்கும் இத்தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு எழுதிய அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாதம்தோறும் விஞ்ஞான துளிர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி, மாநில பொருளாளர் ஜீவானந்தம், கௌரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், கல்லல் கிளைச் செயலாளர் பிரபு, காளையார்கோவில் கிளைத் தலைவர் வீரபாண்டி, சிவகங்கை கிளைச் செயலாளர் அனந்த கிருஷ்ணன், சாக்கோட்டை கிளைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணவாளன், கல்லல் கிளை தலைவர் ராம்மோகன், ஆசிரியர்கள் அனன்சியா, உமாதேவி, மகாலட்சுமி, ஸ்டெம் கருத்தாளர்கள் பாண்டிச் செல்வி, ஜெயப்பிரியா, வரஉமாதேவி, செந்தாமரை, தனலட்சுமி ஆகியோர் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.