மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டபோது
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட இரயில் நிலையம் – ஸ்டேட் பாங்க் சாலை, அரசு கலைக்கல்லூரி சாலை. பந்தய சாலை மற்றும் கிளப் சாலை ஆகிய பகுதிகளில் மாவட்ட மாநகர காவல் ஆணையாளர் வே.பாலகிருஷ்ணன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகள் போன்ற வசதிகள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என வல்லுநர் குழுவுடன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் காவல்துறை துணை ஆணையர் மதிவாணன்(போக்குவரத்து). போக்குவரத்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் சிற்றரசு, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், பாலசுந்தர், விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்