தமிழக அரசுக்கு வலியுறுத்தி மாபெரும் மாநாடு எழும்பூரில் உள்ள  தனியார் அரங்கில் நடைபெற்றது 

Loading

டேன்டீ நிலத்தை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க  கூடலூர் விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா கொடுக்க நாகை சிபிசிஎல் நில எடுப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்  மற்றும் சிறு தேயிலை விவசாயிகள் சங்கம்சார்பில்  தமிழக அரசுக்கு வலியுறுத்தி மாபெரும் மாநாடுமாநில ஒருங்கிணைப்பாளார், எம். எஸ். செல்வராஜ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள  தனியார் அரங்கில் நடைபெற்றது
 இந்த மாநாட்டில் கோரிக்கையாக இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் 1964-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை
அரசுக்கள் இந்த மக்கள் இடத்தில் எதுவுமே கேட்காமல் ஒப்பந்தம் போட்டு இந்தியாவுக்குவரவழைக்கப்பட்டனர்ஒன்றிய அரசு பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்து முழுமையாகமறுவாழ்வு செய்வோம் என உறுதியளித்தது. ஒப்பந்தப்படி மறுவாழ்வுப் பணி முறையாக செய்யப்படவில்லை இதனால் இந்த மக்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பல்வேறுவாழ்வாதாரப்பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.மேற்கண்ட ஒப்பந்த அடிப்படையில் தான் (டேன்டீ) தமிழ்நாடு அரசுதேயிலைத்தோட்டக் கழக 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டேன்டீ பல ஆயிரம் கோடிகளை அரசுக்குஈட்டி கொடுத்துள்ளது. ஆனால், தற்போது உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் காட்டி2152 ஹெக்டர் அழகான தேயிலைத் தோட்டத்தை மூடி இதனையே நம்பி வாழும் தாயகம்
திரும்பிய தமிழர்களை மீண்டும் அகதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிராகஇம்மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.அதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்   தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கும் கேரளா மாநிலம் கள்ளிக்கோட்டை மாவட்டம் சுகந்தகிரி வயநாடு மாவட்டம் புல்ப்பள்ளி  கண்ணூர் மாவட்டம் ஆரல்லா போன்ற இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டு நிலத்தை வேதகிரிய மக்களுக்கு தலை ஐந்து ஏக்கர் விதம் குறித்துக் கொடுத்து தரமான சொந்த வீடும் கேரளா அரசு கட்டிக் கொடுத்துள்ளது ஆகவே தமிழக அரசு  டேன்டீ நிலத்தை அதே மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைக்கின்றனர்   மாநாட்டில் சிறப்பு விருந்தினராக  டெல்லி விவசாயிகள் போராட்ட ராகேஷ்திக்கை  ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் யுத்வீர்சிங்    ஆகியோர்கள் கலந்து கொண்டனர் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்  மற்றும் சிறு தேயிலை விவசாயிகள் சங்கம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
0Shares

Leave a Reply