வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்*
சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் முத்துச்சாமி, கணேசன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொருளாளர் ஜீவானந்தம் நோக்க உரையாற்றினர். வானவில் மன்றம் சார்பாக பள்ளி அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் குறித்து பள்ளி துணை ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழக அளவில் சிவகங்கை மாவட்டத்தை அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்குரிய ஆலோசனைகளை வழங்கினார். ஒன்றிய அளவில் வருகை புரிந்த ஸ்டெம் கருத்தாளர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். பள்ளியில் நடைபெறும் அறிவியல் சோதனைகள் குறித்தும் மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கக் கூடிய அறிவியல் மனப்பான்மை குறித்தும் காளையார்கோவில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சேவற்கொடியோன் ஆலோசனை வழங்கினார். எய்ட் இந்தியா ஒருங்கிணைப்பாளர் ரஹமத்நிஷா நன்றி கூறினார். காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், எஸ் புதூர், திருப்பத்தூர், சிங்கம்புணரி, சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல் ஒன்றியங்களில் உள்ள ஸ்டெம் கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.